Home கலை உலகம் கமலின் தூங்காவனம் – முதல் பார்வை வெளியானது!

கமலின் தூங்காவனம் – முதல் பார்வை வெளியானது!

598
0
SHARE
Ad

CFw6IwdUUAAzu5rஐதராபாத், மே 24 – உத்தமவில்லன், பாபநாசம் மற்றும் விஸ்வரூபம் 2 பாகத்தை தொடர்ந்து கமல் தனது அடுத்த படத்தின் பணிகளை மிக விரைவாகத் தொடங்கிவிட்டார். ‘தூங்காவனம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பார்வை இன்று வெளியானது.

CFw6TtYUgAA3d6yதமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக உள்ள இந்த படத்தில், கமலுக்கு நாயகியாக திரிஷா நடிக்க உள்ளார். மேலும், இவர்களுடன் மிக முக்கியமான வேடத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் மனிஷா கொய்ராலா நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

CFw6h10VEAAf8u2கமலின் நீண்ட நாள் உதவியாளரான ராஜேஷ் என்பவர் இயக்க உள்ள இந்த படம் ‘வேட்டையாடு விளையாடு’ போன்று காவல் துறையை பின்னணியாகக் கொண்ட திகில் கதையாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.