Home அவசியம் படிக்க வேண்டியவை நடிகனாக மாறிய எழுத்தாளர் ஷோபா சக்தி!

நடிகனாக மாறிய எழுத்தாளர் ஷோபா சக்தி!

520
0
SHARE
Ad

shopa3கோலாலம்பூர், மே 25- நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ஷோபாசக்தி.இவர் இப்போது நடிகரானதோடு மட்டுமல்லாமல்,நடிகரான முதல் படமே கேன்ஸ் திரைப்பட விருதையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டின் பிரபல இயக்குநரான  ஜக்குவஸ் ஆடியார்ட் இயக்கிய,ஈழப் போராளிகளின் வாழ்வைப் பிரதிபலிக்கும்’ தீரன்’என்னும் படத்தில் கதை நாயகனாக வாழ்ந்திருக்கிறார் ஷோபாசக்தி.

இந்தப் படத்திற்கு வசனம் எழுதுவதற்காகத்தான் இயக்குநர் முதலில் இவரை அழைத்திருக்கிறார்.இவரது தோற்றம் ஈழப்போராளியின் தோற்றம் போலவே இருக்க,இவரையே கதையின் நாயகனாகவும் நடிக்க வைத்துவிட்டார்.

#TamilSchoolmychoice

எழுத்தைப் போலவே இவரது நடிப்பும் உத்வேகமாகக் காட்சியளிக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.