Home உலகம் ஊழல் வழக்கில் இஸ்ரேல் முன்னாள் பிரதமருக்கு 8 மாதம் சிறை தண்டனை!

ஊழல் வழக்கில் இஸ்ரேல் முன்னாள் பிரதமருக்கு 8 மாதம் சிறை தண்டனை!

582
0
SHARE
Ad

olmerஜெருசலேம், மே 26 – இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மர்ட் (68) மீதான ஊழல் வழக்கில் 8 மாத சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

எஹுட் ஓல்மர்ட் கடந்த ஆண்டு மற்றொரு ஊழல் வழக்கில் 6 வருட சிறை தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டு வரலாற்றில் ஊழல் குற்றச்சாட்டுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற பெருமையை ஓல்மார்ட் பெற்றார்.

ஆனால் இத்தண்டனைக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் அவர் மீது தற்போது வேறொரு ஊழல் வழக்கில் 8 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இவ்வழக்கில் அமெரிக்காவில் உள்ள தனது ஆதரவாளர் ஒருவரிடமிருந்து கடிதம் மூலம் பணம் பெற்றதற்காக ஓல்மர்ட்டுக்கு தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை ஓல்மர்ட் பிரதமராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.