Home தொழில் நுட்பம் 20,000 ஊழியர்களுக்கு நாளை பணி நீக்க கடிதம் – மாஸ் அறிவிப்பு

20,000 ஊழியர்களுக்கு நாளை பணி நீக்க கடிதம் – மாஸ் அறிவிப்பு

481
0
SHARE
Ad

MAsகோலாலம்பூர், மே 26 – 6000 மாஸ் பணியாளர்கள் நீக்கப்படுவர், 8000 மாஸ் பணியாளர்கள் நீக்கப்படுவர் என்பது போன்ற யூகங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக, சுமார் 20000 ஊழியர்களுக்கு நாளை முதல் பணி நீக்க கடிதத்தை வழங்க மாஸ் முடிவு செய்துள்ளது.

எம்எச் 370 மற்றும் எம்எச் 17 பேரிடர்களால் கடும் பொருளாதார சிக்கல்களுக்கு ஆளான மாஸ் நிறுவனம், பின்னர் அதன் பெரும் பங்குதாரரான கஸானா நேஷனல் நிறுவனத்தால் கைப்பற்றப்பட்டது. 12 முக்கிய அம்சங்களைக் கொண்ட மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் கஸானா, மாஸில் ஒட்டுமொத்தமாக பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

தலைமை நிர்வாகி முதல் கீழ்மட்ட ஊழியர்கள் வரை ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மாற்றம் அந்நிறுவனத்திற்கு புத்துயிர் ஊட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுவரை ‘மலேசியா ஏர்லைன்ஸ் சிஸ்டம் பெர்ஹாட்’ (Malaysia Airlines System Berhad) ஆக இருந்து வந்த மாஸ், ‘மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட்’ (Malaysia Airlines Berhad) என பெயர்மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. அலுவலக ரீதியாக இதன் செயல்பாடுகள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், தனது 20000 ஊழியர்களுக்கு பணி நீக்க கடிதத்தை நாளை முதல் வழங்க இருப்பதாக மாஸ் அறிவித்துள்ளது. இந்த கடிதத்தில் மாஸின் புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ முகமது பாயிஸ் ஆஸ்மி கையெழுத்திடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயத்தில் சில ஊழியர்கள் புதிய நிறுவனமான ‘மாப்’ (MAB)-ல் பணியமர்த்தப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக கஸானா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.