Home கலை உலகம் சிங்கப்பூரில் சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ இசை வெளியீடு!

சிங்கப்பூரில் சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ இசை வெளியீடு!

834
0
SHARE
Ad

rajini muruganசென்னை, மே 26 – ‘காக்கிச்சட்டை’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ரஜினிமுருகன்’. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் இசை மே 29-ஆம் தேதி சிங்கப்பூரில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில், ‘என்னமா இப்படி பண்றீங்களேமா’ என்று தொடங்கும்  பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்.

இந்நிலையில், சிங்கப்பூர் சன் டெக் சிட்டியில் நடைபெறவிருக்கும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்சியில் இப்படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள் படக்குழுவினர்.

#TamilSchoolmychoice

இந்நிகழ்வில் சிவகார்த்திகேயனும், டி.இமானும் இணைந்து இப்பாடலை பாடவிருக்கிறார்களாம். மேலும் நிகழ்ச்சியில் கீர்த்திசுரேஷ், பொன்ராம், லிங்குசாமி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பங்கேற்கவிருக்கின்றனர்.

இது குறித்து, டி.இமான் டுவிட்டர் பக்கத்தில் ‘சிங்கபூரில் இசை’ என்று டுவிட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷ், சூரி, சமுத்திரகனி, ராஜ்கிரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது ‘ரஜினி முருகன்’.