Home வாழ் நலம் தொற்று நோய்களை குணமாக்கும் முந்திரிபழம்!

தொற்று நோய்களை குணமாக்கும் முந்திரிபழம்!

1270
0
SHARE
Ad

cashew-fruitsமே, 26 – முந்திரிபழம் கிராமங்களில் அதிகளவு பயிர் செய்யப்படுகிறது. நாம் முந்திரி பருப்புக்களை போல முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு.

ஏனெனில் பழத்தில் உள்ள ‘டானின்’ எனும் வேதிப்பொருளே காரணம். இதனால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது.

இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிடலாம். மா, பலா, ஆரஞ்சு போன்று பழங்களை போல் அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம்.

#TamilSchoolmychoice

CashewNuts-fruitமுக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிபழத்தில் ஐந்து மடங்கு அதிகமுள்ளது. வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது.

பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின்றது. ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குணமாக்குகின்றது. மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது.

cashew-appleஇவற்றில் புரதம், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. மேலும், பழத்தில் டானின் எனும் வேதிப்பொருள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணமாக செயல்படுகிறது. இப் பழத்தில் இருந்து சாறு எடுத்து ஜாம் போன்ற பொருட்களை தயாரித்து பயன்படுத்தலாம்.