Home நாடு டத்தின்ஸ்ரீ கனகம் பங்குபெறுவதில் என்ன தவறு? – சிவசுப்ரமணியம் கேள்வி

டத்தின்ஸ்ரீ கனகம் பங்குபெறுவதில் என்ன தவறு? – சிவசுப்ரமணியம் கேள்வி

511
0
SHARE
Ad

L.Siva

கோலாலம்பூர்,மே 26 – கணவரின் பணிச் சுமையைக் குறைப்பதில் மனைவிக்கும் பங்கு உண்டு.

அவ்வகையில்,பல்வேறு பணிகளைக் கவனிக்க அங்குமிங்கும்  பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலுக்குத் துணையாக அவரது மனைவி டத்தின்ஸ்ரீ கனகம் பங்கு பெறுவதில் தவறு என்ன இருக்கிறது என்று கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் சிவசுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

என் கணவர் பணிச் சுமையால் பரபரப்பாக இருக்கிறார்.ஆகையால்,அவரது சார்பாக நான் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.இங்கு சேகரிக்கப்படும் தகவல்களை அவரிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது என்னுடைய பணியாகும் என டத்தின்ஸ்ரீ தெளிவாகக் கூறிய பிறகும்,உண்மையைப் புரிந்து கொள்ள இயலாதவர்கள் அவரைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.இது கண்டிக்கத்தக்கதாகும் எனச் சிவசுப்பிரமணியம் சாடினார்.

மேலும் அவர், “துன் சம்பந்தனுக்குத் துணையாக தோபுவான் உமா சம்பந்தனும், டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலுக்குத் துணையாக டத்தின்ஸ்ரீ இந்திராணியும் கலந்து கொள்ளும்போது, டத்தோஸ்ரீ பழனிவேலுக்குத் துணையாக டத்தின்ஸ்ரீ கனகம் ஏன் கலந்து கொள்ளக் கூடாது?”எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“அதோடு மட்டுமல்லாமல், மலேசிய இந்தியர் செயல்திட்ட மேம்பாட்டிற்கு வெள்ளையர்களை டத்தோஸ்ரீ பழனிவேல் நியமித்தார்  என்றும் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு கட்சி நடவடிக்கைகளுக்கு  வெள்ளையர்களை ஆலோசகராகப் பயன்படுத்தியுள்ளார்.

குறிப்பாக எய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்திற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரை வேந்தராக நியமித்தார். இதே போன்று டிஎன்பி விவகாரம்உட்பட பல நடவடிக்கைகளுக்கு வெள்ளையர்கள் டத்தோஸ்ரீ சாமிவேலுக்கு ஆலோசகர்களாகச் செயல்பட்டுள்ளனர்.

ஆகவே, டத்தின்ஸ்ரீ கனகத்தைக் குறை கூறுபவர்கள் கட்சியின் கடந்த கால வரலாறுகளைத் திரும்பிப் பார்த்துப்  பேசுங்கள்”என்று சிவசுப்பிரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார்.