Home கலை உலகம் ஜி.வி.பிரகா‌ஷ் நடித்த ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ பட முன்னோட்டம் வெளியீடு!

ஜி.வி.பிரகா‌ஷ் நடித்த ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ பட முன்னோட்டம் வெளியீடு!

1052
0
SHARE
Ad

Trisha Illana Nayanthara Movie Stillsசென்னை, மே 26 – இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்து வரும் படம் ‘திர்ஷா இல்லனா நயன்தாரா’. இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘கயல்’ படத்தில் நடித்த ஆனந்தி நடித்து வருகிறார். மேலும் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பல்வேறு இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கி வருகிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இளைஞர்களைப் பற்றி உருவாகும் இப்படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது.

#TamilSchoolmychoice

படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

இந்த முன்னோட்டம் அனைத்து இளைஞர்களுக்கும் பிடிக்கும் வகையில் உள்ளது. தற்போது வரை இந்த முன்னோட்டத்தை 6 இலட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.