Home இந்தியா திருப்பதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் செம்மரம் பதுக்கலா?

திருப்பதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் செம்மரம் பதுக்கலா?

617
0
SHARE
Ad

semmaramதிருப்பதி, மே.26– ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாச்சல வனப்பகுதியில் கடந்த மாதம் 20 தமிழகக் கூலித் தொழிலாளர்கள் செம்மரம் வெட்டிக் கடத்த முயன்றதாக அம்மாநிலப் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில்,துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் உள்பட செம்மரக் கடத்தல்காரர்கள் அப்பகுதியில் செம்மரங்களைப் பதுக்கி வைத்துள்ளதாகத் தகவல் கிடைத்ததால், வனத்துறையினர் அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி முரளிகிருஷ்ணன் கூறியதாவது: “துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்தது. இதனால் அங்கு தீவிர சோதனை நடத்தி வருகின்றோம். மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு, கர்நாடகா வனப் பகுதியில் இருந்து செம்மரக் கடத்தல்காரர்கள் சேஷாச்சல வனப்பகுதியில் ஊடுருவுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

#TamilSchoolmychoice

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தின் வழிகளைப் பயன்படுத்தாமல் அவர்கள் அனந்தபுரம் வழியாகச் சேஷாசல வனப்பகுதியில் நுழைவதாகத் தெரிகிறது.எனவே,செம்மரக் கடத்தலைத் தடுக்க தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்” எனக் கூறினார்.