Home உலகம் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயை சந்தித்து ஆறுதல் கூறிய சிறிசேனா!

கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயை சந்தித்து ஆறுதல் கூறிய சிறிசேனா!

721
0
SHARE
Ad

mythiri_jaff_001யாழ்ப்பாணம், மே 27 – புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை அதிபர் மைத்திரிபால சிறிசேனா வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.

வித்தியாவின் கொலை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்கு இன்று காலை அதிபர் மைத்திரிபால சிறிசேபா யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

01-21அப்போது, சிறிசேனா வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்காரவை சந்தித்துக் கலந்துரையாடியதுடன், வேம்படி பெண்கள் உயர்தரப் 17 பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

#TamilSchoolmychoice

அதன்பின்னர் வடக்கு ஆளுநரின் அலுவலகத்திற்கு வித்தியாவின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

mythiri_jaff_2752015_1அப்போது குற்றவாளிகளை விரைவில் அடையாளம் கண்டு தண்டனையினை வழங்குவதாகவும் வித்தியாவின் கொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாகவும் பெற்றோரிடம் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும் வித்தியாவின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வடக்கு முதல்வரின் ஊடாக தெரியப்படுத்துமாறும், அவற்றை பெற்றுத்தர தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.