Home நாடு தாமான் மேடான் போராட்டக்காரர்கள் தேச நிந்தனைக்காக விசாரிக்கப்படவில்லை – ஹமிடி

தாமான் மேடான் போராட்டக்காரர்கள் தேச நிந்தனைக்காக விசாரிக்கப்படவில்லை – ஹமிடி

581
0
SHARE
Ad

zahidhamidicitizen1606கோலாலம்பூர், மே 29- தாமான் மேடானில் உள்ள தேவாலயத்தில் சிலுவைச் சின்னத்தை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாறாக போராட்டக்காரர்கள் அத்துமீறி தேவாலயத்தில் நுழைய முயன்றதாக காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரிலேயே விசாரணை நடைபெறுவதாக டத்தோஸ்ரீ சாகிட் ஹமிடி கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஐசெக உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார் ஹமிடி.

#TamilSchoolmychoice

“காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்தப் போராட்டம் தேச நிந்தனைக்குரியதல்ல என்று தேசிய காவல்படைத் தலைவரின் (ஐஜிபி) அறிக்கை தெரிவிக்கிறது. அத்துமீறி நுழைய முயன்றதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள அந்தப் புகார் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் வரும் குற்றமாகக் கருதப்படாது,” என்று ஹமிடி தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

அக்குறிப்பிட்ட போராட்டம் தேச நிந்தனைக்குரியதல்ல என்று கூறுவதற்கு முன் ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர், அட்டர்னி ஜெனரலை (சட்டத்துறைத் தலைவரை) கலந்தாலோசித்தாரா?

அவ்வாறு கூறியதற்காக ஐஜிபி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? தேவாலயத்தின் முன் நடந்து போராட்டம் தொடர்பிலான விசாரணையின் தற்போதைய நிலை என்ன? என்று கோபிந்த் சிங் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் இந்தப் போராட்டம் தொடர்பான காவல்துறையின் விசாரணை அறிக்கை அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள சாகிட் ஹமிடி, காவல்துறையின் பரிந்துரைகளுக்கு ஏற்ப அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அட்டர்னி ஜெனரல் பரிசீலிப்பார் என்று கூறியுள்ளார்.