Home அவசியம் படிக்க வேண்டியவை விமான நிலையத்தில் விமானத்தை நிறுத்துவதற்காக சண்டை போட்ட பெண்! (காணொளியுடன்)

விமான நிலையத்தில் விமானத்தை நிறுத்துவதற்காக சண்டை போட்ட பெண்! (காணொளியுடன்)

526
0
SHARE
Ad

womanகோலாலம்பூர், மே 29 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சமீபத்தில் பெண் ஒருவர் விமானத்தை நிறுத்துமாறு கூறி அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் சண்டை போட்டுள்ளார். அவரின் இந்த செயலை விமான பயணி ஒருவர் காணொளியாக்க,  அது இப்போது சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை பகிரப்பட்டுள்ள அந்த காணொளியில், ஜகார்தாவிற்கு புறப்படத் தயாராக இருக்கும் ஏர் ஏசியா ஏகே380 விமானத்திற்கு தாமதமாக வந்த பெண், மூடப்பட்ட கதவுகளை நோக்கி விரைகிறார். அவரை பின்தொடர்ந்து வந்த விமான நிலைய அதிகாரிகள், அப்பெண்ணை தடுத்து நிறுத்துகின்றனர். ஆனால் அப்பெண் அதிகாரிகளை சரமாரியாக திட்டுகிறார்.

அப்போது அதிகாரி ஒருவர் அப்பெண்ணின் கையைப் பிடித்து வெளியே இழுக்க முயற்சிக்கிறார். அபெண்ணோ அதிகாரியை காலால் எட்டி உதைக்கிறார். மேலும் அவர், “என்னிடம் விமான டிக்கெட் உள்ளது. விமானம் எனக்காக ஏன் காத்திருக்க வில்லை” என்று கூறிக் கொண்டே சண்டை போடுகிறார்.

#TamilSchoolmychoice

சற்றே கலவரத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள், பெண் காவலர்களின் உதவியுடன் அப்பெண்ணை அங்கிருந்து வெளியேற்றினர்.

அந்த காணொளியை கீழே காண்க:

https://www.youtube.com/watch?v=Zs3RT5c8zPc