Home தொழில் நுட்பம் கூகுளின் ‘போட்டோஸ்’ சேவை அறிமுகமானது!

கூகுளின் ‘போட்டோஸ்’ சேவை அறிமுகமானது!

979
0
SHARE
Ad

google photosகோலாலம்பூர், மே 29 – கூகுள் நிறுவனம் தனது ‘போட்டோஸ்’ (Photos) சேவையை நேற்று அறிமுகப்படுத்தியது. கணக்கற்ற புகைப்படங்களை வரிசைப்படுத்தவும், அவற்றின் தரத்தை மெருகேற்றவும், தேவைப்பட்டால் அதனை பிற சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளவும் பயன்படும் ஒரு பொதுவான பயன்பாடு தான் கூகுள் போட்டோஸ்.

புகைப்படங்களை எடுப்பதை விட அவற்றை வரிசைப்படுத்தி ஒரு தொகுப்பாக வைத்திருப்பது சற்றே அயர்ச்சியை ஏற்படுத்தும் வேலை. நடைமுறையில் இருக்கும் வேலைகளில் நமது புகைப்படங்களை தொகுப்பதும், தேவையான மாற்றங்களை செய்வதும் நம்மால் முடியாத காரியம்.

இதற்கென நாம் இணையத்தில் பல்வேறு செயலிகளை பயன்படுத்த வேண்டியிருக்கும். புகைப்படங்களில் மாற்றங்களை செய்வதற்கு ஒரு செயலி, சேகரிப்பதற்கு ஒரு செயலி என தனித்தனி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டி வரும். இந்நிலையில் தான் கூகுள் தனது போட்டோஸ் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

#TamilSchoolmychoice

‘கூகுள் டிரைவ்’ (Google Drive) போன்று கூகுள் போட்டோஸ் சேவையும் அளவற்ற சேமிப்பு வசதியை அளிக்கிறது. இந்த சேவையில் நமது புகைப்படங்களை பதிவேற்றம் செய்தால் மட்டும் போதுமானது, நமது இடங்கள் மற்றும் பின்புலங்களுக்கு தகுந்தவாறு அவற்றை தானியங்கியாகவே வரிசைப்படுத்திவிடும். இதற்காக கூகுள், படத்தை அங்கீகரிக்கும் ‘இமேஜ் ரிகக்னைசன்’ (Image Recognition) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளது. மேலும் இந்த சேவையில் தரத்தை மெருகேற்ற தேவையான மாற்றங்களை செய்யும் வசதியும் உள்ளது.

அனைத்து சேகரிப்பு மற்றும் மாற்றங்களையும் செய்து முடித்தாகிவிட்டது. நமது புகைப்படங்களை டுவிட்டர் அல்லது வேறு சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ள வேண்டுமா அந்த வசதியும் உள்ளது. இணையப் பயன்பாடாகவும், செயலியாகவும் வெளியிடப்பட்டுள்ள இந்த சேவை பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

‘கூகுள் ப்ளே ஸ்டாரில்’ (Google Play Store) இந்த செயலியை அண்டிரொய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இணையப்பயன்பாடாக இதனை பெறுவதற்கு பயனர்கள் கீழ் காணும் இணைப்பைப் பயன்படுத்த வேண்டும்.

https://photos.google.com/