Home 13வது பொதுத் தேர்தல் பிகேஆர் கட்சிதான் அதிகமான இடங்களுக்கு போட்டியிடும் மிகப் பெரிய எதிர்க்கட்சி

பிகேஆர் கட்சிதான் அதிகமான இடங்களுக்கு போட்டியிடும் மிகப் பெரிய எதிர்க்கட்சி

587
0
SHARE
Ad

PKR-Logo-Sliderகோலாலம்பூர், மார்ச் 06 – எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் அன்வார் இப்ராகிம் தலைமையில் இயங்கும் பிகேஆர் கட்சி, மொத்தமுள்ள 222 நாடாளுமன்ற தொகுதிகளில் 90 இடங்களுக்கு போட்டியிடுவதன் மூலம் எதிர்க்கட்சிகளில் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இதன்மூலம் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும் மக்கள் கூட்டணியின் முயற்சிக்கு தலைமையேற்று களத்தில் இறங்கியுள்ள மிகப் பெரிய கட்சியாக பிகேஆர் திகழ்கிறது.

பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் டத்தோ துவான் இப்ராஹிம் துவான் எதிர்க்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை பற்றி கருத்து தெரிவிக்கும் போது, மக்கள் கூட்டணியின் தலைமை செயற் குழு இது குறித்து முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

அந்த முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது தங்களின் பாஸ் கட்சிக்கு சுமார் 80 இடங்கள் ஒதுக்கப்படலாம் என்றும் ஜனநாயக செயல் கட்சியினருக்கு 46 முதல் 50 இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

பிகேஆர் கட்சியினருக்கு 90 இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் நேற்று ‘மோல்’ என்ற செய்தித் தளத்தில் துவான் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், ஆசிய வியூகம் மற்றும் தலைமைத்துவ கழகம் (ASLI) என்ற அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக செயல் கட்சியினர் வருகிற பொதுத் தேர்தலில் குறைந்தது 35 முதல் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் 2008இல் 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற அவர்கள் இம்முறை அதனைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக செயல் கட்சியினருக்கு இதுவரை மிகக் குறைவான இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, மக்கள் கூட்டணியினர் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும் பட்சத்தில், ஜனநாயக கட்சியின் தலைவர்களில் ஒருவர், பிரதமர் பதவில் அமர எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது என்றும் துவான் இப்ராகிம் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் அன்வார்தான் பிரதமர் ஆவார் என தற்போதைக்கு கூற முடியாது என்றும் துவான் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

மேலும், தாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் வெற்றி குறித்து அந்தந்த கட்சியின் வேட்பாளர்களுடன் கலந்தாலோசித்து வருவதாகவும், ஒருவேளை தங்கள் பாஸ் கட்சி தேர்தலில் பெரும்பான்மையான வெற்றியை அடையும் பட்சத்தில், யார் பிரதமர் பதவி வகிப்பது என்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அன்வார் பிரதமராவதையே ஜனநாயக செயல் கட்சியினரும் மற்றும் பிகேஆர் கட்சினரும் விரும்புகின்றனர்.