Home கலை உலகம் சாதனையாளர் விருது வாங்கினார் த்ரிஷா

சாதனையாளர் விருது வாங்கினார் த்ரிஷா

739
0
SHARE
Ad

trishasசென்னை, மார்ச்.6- நடிகை த்ரிஷா  கடந்த 10 வருடங்களாக சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சினிமாவை பொறுத்த வரை நிறைய நடிகைகள் சில வருடங்களிலேயே தங்களது மார்க்கெட்டை இழந்து ஒதுங்கியுள்ளனர்.

இன்னும் சில கதாநாயகிகள் அக்கா, அண்ணி வேடங்களுக்கும் மாறியுள்ளார்கள். இவர்கள் மத்தியில் த்ரிஷா தொடர்ந்து கதாநாயகியாக நீடிப்பது சாதனையாக கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

சாமி, கில்லி, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் த்ரிஷா.

சமீபத்தில் விஷாலுடன் சமர் படத்தில் நடித்துள்ளதும் பூலோகம், என்றென்றும் புன்னகை படங்களில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் த்ரிஷாவின் திரையுலக சாதனையை கௌரவிக்கும் வகையில் சாதனையாளர் விருதை நடிகர்கள் மாதவன், ஜீவா ஆகியோர் வழங்கினர்.