Home அவசியம் படிக்க வேண்டியவை 2014 இசைத் திருவிழா: 6 பேர் பலியானது போதையால் அல்ல – மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவல்

2014 இசைத் திருவிழா: 6 பேர் பலியானது போதையால் அல்ல – மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவல்

553
0
SHARE
Ad

main_0106_p4b_ooகோலாலம்பூர், ஜூன் 1 – கடந்த ஆண்டு நடைபெற்ற ‘பியூட்சர் மியூசிக் ஃபெஸ்டிவல் ஏசியா 2014’ இசைத் திருவிழாவில், 6 பேர் மரணமடைந்தது குறித்தக் காரணத்தைக் கண்டறியுமாறு மலேசியன் பொழுதுபோக்கு துறை மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

அதிக போதை காரணமாக அந்த 6 பேரும் மரணமடைந்ததாக கூறப்பட்டு வந்த இந்த சம்பவத்தில், பிரேதப் பரிசோதனைஆய்வில் ஈடுப்பட்டிருந்த நோயியல் மருத்துவர்கள், அவர்கள் இறப்பிற்குக் காரணம் போதை அல்ல சூட்டு வாதம் (heatstroke) என்பதைக் கண்டறிந்துள்ளதாக ‘தி ஸ்டார்’ நாளிதழ் இன்று தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து காவல்துறை தற்போது இந்த சம்பவத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சூட்டுவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நம் உடம்பில் வெப்பநிலை அதிகரிக்கும் போது மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு மரணம் சம்பவிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அண்மைய காலங்களாக, இசைத் திருவிழாக்களில் ‘எலக்ட்ரானிக் டான்ஸ் மியூசிக்’ (Electronic dance music) மிகவும் பிரபலமாக உள்ளது.

இந்நிலையில், காவல்துறையின் இந்த அறிவிப்பால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சங்கம் (Association of Arts, Live, International Festivals and Events) அதிர்ச்சியடைந்துள்ளது.