Home உலகம் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு ரஷ்யா திடீர் தடை!

மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு ரஷ்யா திடீர் தடை!

386
0
SHARE
Ad

russiyaமாஸ்கோ, ஜூன் 2 – ரஷ்யாவுடன் உறவுகளைத் துண்டித்துக் கொண்ட மேற்கத்திய நாடுகளின் 89 தலைவர்களுக்கு ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் பல ஆண்டுகளாக பனிப்போர் இருந்து வருகிறது. எனினும், ஒரு சில நாடுகள் ரஷ்யாவுடன் பொருளாதார ரீதியாக பல்வேறு உடன்படிக்கைகளை மேற்கொண்டு தான் இருந்தன. இந்நிலையில் உக்ரைன் விவகாரம் தலைதூக்கத் தொடங்கியது முதல் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகளை விதித்தன. அது முதல் அந்நாடுகளுக்கும் ரஷ்யாவிற்குமான உறவு முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் தான் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்யா தடைவிதித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அரசு ரகசிய பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளது. இந்த பட்டியலில் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த 89 தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

#TamilSchoolmychoice

அந்த பட்டியலில் இங்கிலாந்தின் முன்னாள் துணை பிரதமர் நிக் கிளெக், மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மால்கமு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதுபற்றிய அறிவிப்பினை ரஷ்யா கடந்த வாரம் ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் டேவிட் கேமரூன் தலைமையில் மீண்டும் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள நிலையில், இக்கட்சியை சேர்ந்த தலைவர்களுக்கு ரஷ்யா தடைவிதித்திருப்பதற்கு இங்கிலாந்து அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.