Home கலை உலகம் மிகுந்த எச்சரிக்கையுடன்தான் விளம்பரங்களில் நடிக்கின்றேன் – அமிதாப் பச்சன்!

மிகுந்த எச்சரிக்கையுடன்தான் விளம்பரங்களில் நடிக்கின்றேன் – அமிதாப் பச்சன்!

487
0
SHARE
Ad

amitab-957புதுடெல்லி, ஜூன் 2 – ‘விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யும் போது, மிகுந்த எச்சரிக்கையுடனே நடந்து கொள்கிறேன்’ என நடிகர் அமிதாப் பச்சன் விளக்கம்  அளித்துள்ளார்.

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் விளம்பர தூதரான நடிகர் அமிதாப் பச்சன் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு  வருகின்றன.

இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அமிதாப் பச்சன் அளித்துள்ள பேட்டியில்: “விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம்  செய்யும் போது மிகுந்த எச்சரிக்கையுடனே நடந்து கொள்வேன். சட்டரீதியாக ஏதாவது பிரச்சனை வந்தால், சம்மந்தப்பட்ட நிறுவனமே பொறுப்பு என்று  தான் ஒப்பந்தமே செய்து கொள்கிறேன்”.

#TamilSchoolmychoice

“அதையேதான் நெஸ்லே நிறுவனத்துடனும் கடைபிடித்துள்ளேன். பிரபலமாக இருப்பதால் பல்வேறு சர்ச்சைகள் எழத்தான் செய்யும். எனவே எதற்கும் தயாராக முன்னெச்சரிக்கையுடனே நடந்து கொள்கிறேன்” என அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

முன்னதாக மற்றொரு விளம்பர தூதரான நடிகை மாதுரி தீட்சித் அளித்த விளக்கத்தில்; “‘வாடிக்கையாளர்களும்,  பொருட்களின் தரமுமே முக்கியம் என்று நெஸ்லே நிறுவனத்தார் என்னிடம் தெரிவித்துள்ளனர்”.

“தரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என்றும், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் நெஸ்லே நிறுவனத்தால் உறுதி  அளித்துள்ளனர்’ என்றார்.

இதற்கிடையே, பீகாரின் முசாபர்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீல் ஒருவர் மேகி நூடுல்ஸ் தொடர்பாக, நெஸ்லே நிறுவன  அதிகாரிகள், நடிகர் அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.