Home இந்தியா ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறேன் ஆதரவு தாருங்கள் – வைகோ, ஜி.கே.வாசனிடம் டிராபிக் ராமசாமி வேண்டுகோள்!

ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறேன் ஆதரவு தாருங்கள் – வைகோ, ஜி.கே.வாசனிடம் டிராபிக் ராமசாமி வேண்டுகோள்!

750
0
SHARE
Ad

vaiko-ramaswamy-600சென்னை, ஜூன் 2 – ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும் தனக்கு ஆதரவு தரக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இன்று டிராபிக் ராமசாமி சந்தித்து ஆதரவு கோரினார்.

அதேபோல தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனையும் அவர் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். ஏற்கனவே திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவை டிராபிக் ராமசாமி கோரியுள்ளார்.

இந்த நிலையில் இன்று வைகோவையும், ஜி.கே.வாசனையும் அவர் சந்தித்தார். வைகோவை தாயகம் அலுவலகத்திலும், வாசனை அவரது கட்சி அலுவலகத்திலும் இதுதொடர்பாக சந்தித்துப் பேசினார் டிராபிக் ராமசாமி.

#TamilSchoolmychoice