சென்னை, ஜூன் 2 – ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமைப் பொறுப்பிலிருந்து சௌந்தர்யா அஸ்வின் ரஜினிகாந்த் ராஜினாமா செய்துள்ளார். இதை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
சௌந்தர்யா அஸ்வின் ரஜினிகாந்த் ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை பொறுப்பிலிருந்து தான் விலகுவதாகவும், தனது குழந்தையுடன் நேரம் செலவிட வேண்டி ஈராஸ் நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாகவும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும், “எனது அடுத்த கட்ட பணியிலும் ஈடுபட உள்ளேன்” என தெரிவித்துள்ளார். ’கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீட்டின் போதே ரஜினி சௌந்தர்யாவை அவரது குடும்ப வாழ்க்கையை முதலில் கவனிக்கவும் என கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதே போல் ரஜினியும் குழந்தையுடன் நேரம் செலவிடும்படி கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி ‘ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் சௌந்தர்யா அஸ்வின்.
சமீபத்தில் குழந்தை பிறந்த சௌந்தர்யா தற்போது இந்த பதவியை ராஜினாமா செய்தது சரியே என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இனி அந்த இடத்திற்கு யார் என்பது விரைவில் அறிவிக்கப்படலாம்.