Home நாடு அன்வார் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதி!

அன்வார் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதி!

454
0
SHARE
Ad

????????????????????கோலாலம்பூர், ஜூன் 2 – ஓரினப்புணர்ச்சி வழக்கில் சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு கடந்த சில நாட்களாக கடுமையான உடல்குறைவு ஏற்பட்டதால், இன்று அவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது  குறித்து பிகேஆர் தகவல் தொடர்பு இயக்குநர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறுகையில், “சுங்கை பூலோ சிறையில் இருந்து அன்வார் அழைத்து வரப்பட்டு கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வார்ட் 28-ல் அன்வாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இன்று இரவு 7 மணியளவில் அன்வாரை அவரது குடும்பத்தினர் சந்திக்கவுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்களுக்கு முன்பு பிகேஆர் கட்சியின் சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஹாரி அப்துல் வெளியிட்டிருந்த அறிக்கையில்,

#TamilSchoolmychoice

“கடந்த சில நாட்களாக அன்வாரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகின்றது.”

“அன்வார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய காரணம், கழிவுகளில் ரத்தம் வெளியாவதோடு, அவருக்கு இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக அன்வாரின் உடல் எடை குறைந்து வருவதாகவும் சுமார் 6 கிலோ வரை அவர் எடை குறைந்துள்ளதாகவும் ஜோஹாரி குறிப்பிட்டுள்ளார்.