Home உலகம் டுவிட்டரில் ஒபாமாவின் சாதனையை முறியடித்து கின்னஸ் சாதனை படைத்த கேட்லின் ஜென்னர்!

டுவிட்டரில் ஒபாமாவின் சாதனையை முறியடித்து கின்னஸ் சாதனை படைத்த கேட்லின் ஜென்னர்!

552
0
SHARE
Ad

Obamaலாஸ் ஏஞ்சல்ஸ், ஜூன் 3 – டுவிட்டரில் கணக்கு தொடங்கிய 4 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோரை இரசிகராக பெற்று, அமெரிக்காவை  சேர்ந்த கேட்லின் ஜென்னர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்கு  முன்பு கேட்லின் ஆணாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளமான டுவிட்டரில், பிரபலங்கள் பெரும்பாலானோர், தங்களுக்கென ஒரு  கணக்கை தொடங்கி, தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

டுவிட்டரில் இடப்படும் கருத்துக்கள், புகைப்படங்கள் சில நேரம்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த நிலையில், டுவிட்டரில் தனது கணக்கை தொடங்கி  4 மணி நேரத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார் கேட்லின் ஜென்னர் (65).

#TamilSchoolmychoice

நேற்று  முன்தினம் அவர் கணக்கை (@Caitlyn_Jenner) தொடங்கிய 4:03 மணி நேரத்தில், 10 லட்சம் பேர் அவரை பின் தொடர்ந்துள்ளனர் (பாலோயர்ஸ்). இதன் மூலம் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கின்னஸ் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

shenotheமுன்னதாக, கடந்த மாதம் 18-ஆம் தேதி, அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கென்று தனி கணக்கு (@POTUS) டுவிட்டரில் தொடங்கப்பட்டது. இந்த தகவல்  பரவியதும், அடுத்த 5 மணி நேரத்தில், 10 லட்சம்பேர் அவரது கணக்கை பின் தொடர்ந்தனர்.

இதற்கு முன்பாக, ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டோனி, 22  மணி நேரத்தில் 10 லட்சம் பேரை பாலோயர்ஸாக பெற்றிருந்தார். அந்த சாதனை மே 18-ல் ஒபாமாவால் முறியடிக்கப்பட்டது. இந்த நிலையில்,  ஒபாமாவின் சாதனை, நேற்று முன்தினம், கேட்லின் ஜென்னரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம், தான் பெண்ணாக மாறிவிட்டதாக ஜென்னர் அறிவித்தார். இனிமேல் தன்னை கேட்லின் ஜென்னர் என்றுதான்  அழைக்க வேண்டும் என, டுவிட்டரின் வழியே அன்புக் கட்டளை போட்டுள்ளார்.

கேட்லின் ஜென்னருக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா, மகள் கிம்  கார்டஷன் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் டுவிட்டர் கணக்கை தொடங்கிய கேட்லின் மொத்தம் 3 டுவிட்டுகளை பதிவு செய்துள்ளார்.

caitlyn-jenner-tweets-welcome-bruce-leadமுதல் டுவிட்டாக, தான் பெண்ணாக  மாறிய பின்னர் எடுத்த கவர்ச்சி படத்தை (2.6 லட்சம் விருப்பம்) வெளியிட்டுள்ளார் கேட்லின். இரண்டாவது டுவிட்டில், “நீண்ட நாள் போராட்டத்துக்கு  பின்னர், நான் எதை விரும்பினேனோ அதை அடைந்துள்ளேன்; மிக்க மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார் (3.6 லட்சம் விருப்பம்).

3 வது டுவிட்டை அவர்  போடுவதற்கு முன்பாக, ஒபாமாவின் கின்னஸ் சாதனை முறியடிக்கப்பட்டு விட்டது. இதற்கு தனது 3-வது டுவிட்டில் நன்றி தெரிவித்துள்ளார்  கேட்லின். தற்போது வரைக்கும், அவரை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அமெரிக்காவை சேர்ந்த ஜென்னர், முன்பு ஆணாகத்தான் இருந்தார். அப்போது அவரது பெயர் புரூஸ் ஜென்னர். தடகளப் போட்டிகளில் பங்கேற்று  பதக்கங்களை வென்ற ஜென்னர்,

பின்னாளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலம் அடைந்தார். இவர் மிகவும் பிரபலான தொலைக்காட்சி நடிகை கிம் கார்டஷனின்  வளர்ப்பு தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

caitlynஇளம் பருவத்திலேயே, ஜென்னருக்கு பெண் சுபாவம் உண்டு. பெண்ணாக மாறுவதற்கும் அவர் ஆசை கொண்டிருந்தார். உடல் ரீதியாக அவர்  பெண்ணாக மாறுவதற்கு 1980-ல் இருந்து சிகிச்சைகள் ஆரம்பித்தன.

இடையே, கடந்த 1990-ல் கிறிஸ் கார்டஷனுடன் (கிம்மின் தாயார்) பழக்கம்  ஏற்பட்டபோது, சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தனது வளர்ப்பு மகள் கிம் கார்டஷன் உலக அளவில் பிரபலம் என்பதால், அவருடன்  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம், ஜென்னரும் பிரபலம் அடைந்தார்.