Home நாடு ‘கோ ஆசியான்’ தொலைக்காட்சி அலைவரிசை – நஜிப் தொடங்கி வைத்தார்

‘கோ ஆசியான்’ தொலைக்காட்சி அலைவரிசை – நஜிப் தொடங்கி வைத்தார்

467
0
SHARE
Ad

Untitledபுக்கிட் ஜாலில், ஜூன் 3 – ஆசியான் வட்டாரத்தில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தும் ‘கோ ஆசியான்’ (Go Asean) என்ற செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசையை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.

அஸ்ட்ரோ நெட்வொர்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தப் புதிய அலைவரிசை 24 மணி நேரமும் பயணம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும். மேலும் ஆசியான் அமைப்பில் உள்ள 10 உறுப்பு நாடுகளில் ஷாப்பிங், விளையாட்டு, இசை, விழாக்கள், அறுசுவை உணவுகள் தொடர்பான முக்கியமான, நேயர்களைக் கவரக்கூடிய விஷயங்களை இந்த அலைவரிசையில் கண்டு களிக்கலாம்.

“ஆசியான் வட்டாரத்தின் பல்வேறு முக்கிய அம்சங்களை உலகப் பார்வையாளர்கள் முன் கொண்டு செல்வதற்கான மிகச்சிறந்த வாய்ப்பை ‘கோ ஆசியான்’ வழங்குகிறது” என்று தொடக்க விழாவில் பிரதமர் நஜிப் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

‘மக்களை மையமாகக் கொண்ட ஆசியான்’ என்ற வகையில் வட்டார வளர்ச்சிக்காகவும், ஆசியான் அமைப்புக்கு தலைமையேற்றுள்ள நாடு என்ற வகையிலும் தொடங்கப்பட்டுள்ள ‘கோ ஆசியான்’ அலைவரிசை பிரதமர் நஜிப்பின் சிந்தனையில் உருவான திட்டமாகும்.

“ஆசியான் அமைப்பின் 10 உறுப்பு நாடுகளைப் பற்றிய நிகழ்ச்சிகளைப் படைப்பதன் வழி, அனைத்துலக தளத்தில் வளர்ச்சி காணக்கூடிய வல்லமை ‘கோ ஆசியான்’ அலைவரிசைக்கு உண்டு.

அனைத்துலக அளவில் ஓய்வுக்காகவும், வர்த்தக ரீதியாகவும் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உலகளவில் மிகச் சிறந்த இடமாக ஆசியான் நாடுகள் அமைந்துள்ளதை வெளிப்படுத்த இந்த புதிய அலைவரிசை கைகொடுக்கும்,” என்றார் நஜிப்.