கொழும்பு, ஜூன் 3 – இலங்கை பள்ளி மாணவி வித்தியா படுகொலை வழக்கில் காலத்தை நீடிக்காமல் குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்குமாறு அரசு வழக்கறிஞர் கே.வி.தவராசா நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சில சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டியுள்ள நிலையில் தமக்கு கால அவகாசம் வழங்குமாறு குற்றப்புலனாய்வு துறையினர் நீதிமன்றில் கோரியுள்ளனர்.
இந்நிலையில் காலத்தை நீடிக்காமல் குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்குமாறு வழக்கறிஞர் கே.வி.தவராசா நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் வித்தியா படுகொலைச் சம்பவத்துடன் கைதான சந்தேக நபர்கள் ஆஐர்படுத்தப்பட்டிருந்தநர்.
இந்நிலையில், இதுகுறித்த வழக்கு விசாரணையில் வழக்கறிஞர் கே.வி.தவராசா தலைமையிலான வழக்கறிஞர்களுடன், குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியும் நீதிமன்றத்தில் இருந்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை விட, மேலும் சில சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டியுள்ளதாகவும், தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் கேட்டிருந்தனர் காவலர்கள்.
எனினும், வழக்கை உரிய காலத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும் என கேட்ட வழக்கறிஞர் கே.வி.தவராசா, மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர், யாழ் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் இலங்கையிலும் வெளி நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஆகையால், காலத்தை நீடிக்காமல் துரிதமாக குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.வி.தவராசா கோரிக்கை விடுத்துள்ளார்.