சான் பிரான்சிஸ்கோ, ஜூன் 4 – தலைசிறந்த குற்றவாளிகள் (Top Criminals) என்று கூகுளில் தேடினால், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வருவதற்காக, தகவல் துறை முன்னணி நிறுவனமாம கூகுள் நிறுவனம் மோடியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இது குறித்து “இது நிச்சயம் எங்களுக்கு பிரச்சனையைத் தரக்கூடியது. இது எங்கள் கருத்தை பிரதிபலிக்கவில்லை. நாங்கள் இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.” என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது வரை தலை சிறந்த குற்றவாளிகள் (Top Criminals) என்று கூகுளில் தேடினால் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமே முதலில் வரும். இந்நிலையில், அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.