Home உலகம் “எங்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள்” – மேற்கத்திய நாடுகளுக்குப் புதின் அறிவுரை!

“எங்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள்” – மேற்கத்திய நாடுகளுக்குப் புதின் அறிவுரை!

616
0
SHARE
Ad

putinமாஸ்கோ, ஜூன் 7 – ரஷ்யா, நோட்டோ படைகளைத் தாக்கும் என்ற பயத்தில் எப்பொழுதும் இருக்காதீர்கள். அப்படி இருப்பதனால் தான் ரஷ்யாவை ஒதுக்கும் மனநிலை ஏற்படுகிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மேற்கத்திய நாடுகளிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் புதின் இத்தாலியின் முன்னணிப் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “மேற்கத்திய நாடுகள் எங்களைப் பார்த்துப் பயப்படத் தேவை இல்லை. என்னைப் பொறுத்தவரையில் மேற்கத்திய நாடுகளுக்கும், ரஷ்யாவிற்கும் எந்தவொரு கருத்து வேறுபாடுகளும் இல்லை. உலகம் இன்றைக்கு மாறிவிட்டது. அவர்கள் நினைப்பதைப் போல எந்தவொரு நாடுகளுக்கும் இடையில் மிகப்பெரிய இராணுவச் சண்டை நடைபெற வாய்ப்பில்லை.”

“அதனால் நேட்டோவை ரஷ்யா தாக்குமோ என்று யாரும் நினைக்க வேண்டாம். நேட்டோ உறுப்பினர் நாடுகள் இராணுவம் மற்றும் பாதுகாப்பிற்காகச் செலவிடும் தொகை ரஷ்யாவை விட 10 மடங்கு அதிகமாகும். உதாரணமாக அமெரிக்க இராணுவ பட்ஜெட் தான் உலகிலேயே மிகப்பெரியது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்பது எனது விருப்பமும் கூட” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா, மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்ததால் அங்கு மக்கள் புதின் ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஜி7 மாநாட்டிலும் ரஷ்யா புறக்கணிக்கப்பட்டுள்ளதால், மேற்கத்திய நாடுகளுடன் இணக்கமாக செல்லும் நிலைக்குப் புதின் தள்ளப்பட்டுள்ளது அவரின் இந்தப் பேட்டியின் மூலம் தெரிய வந்துள்ளது