Home நாடு குழந்தையை தண்ணீருக்குள் மூழ்கடிக்கும் காணொளியை நீக்க மறுத்த பேஸ்புக்!

குழந்தையை தண்ணீருக்குள் மூழ்கடிக்கும் காணொளியை நீக்க மறுத்த பேஸ்புக்!

612
0
SHARE
Ad

facebookகோலாலம்பூர், ஜூன் 7 – பேஸ்புக்கில் தினமும் பல்வேறு காணொளிகள் தொடர்ச்சியாக பகிரப்பட்டு வந்தாலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பகிரப்பட்ட ஒரு காணொளியால் அந்நிறுவனம், பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. பெண் ஒருவர் குழந்தையை தண்ணீர் வாளி ஒன்றில் மூழ்கடிக்கும் காணொளியை பேஸ்புக் நீக்க மறுத்ததால் பிரிட்டனைச் சேர்ந்த குழந்தைகள் பாதுகாப்பு தொண்டு அமைப்பு, பேஸ்புக் மீது நடவடிக்கையெடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக் காணொளி ஒன்று பெரும்பான்மையானவர்களால் பகிரப்பட்டது. அந்த காணொளியில் பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் தண்ணீர் நிரம்பிய வாளி ஒன்றில் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு மூழ்கடிக்கிறார். குழந்தை அழுது கதறுவதையும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து வாளியில் குழந்தையை மூழ்கடிக்கப் பார்க்கிறார்.

மேலும் அவர், குழந்தையின் பிஞ்சுக் கால்களைப் பிடித்து தலைகீழாக தூக்குகிறார். அதன் தாடையை பிடித்தபடி முன்னும், பின்னும் ஆட்டி, உதறுகிறார். சுமார் இரண்டு நிமிடங்கள் ஓடும் இந்த காணொளியின் இறுதியில் குழந்தையின் அழுகுரல் நின்று போகின்றது. காண்போரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள இந்த காணொளிக்கு பல்வேறு கண்டனங்களை எழுப்பினாலும் பேஸ்புக் அதனை நீக்க மறுத்தது.

#TamilSchoolmychoice

இது குறித்து பேஸ்புக் நிறுவனம் கூறுகையில், “இந்த காணொளியில் குழந்தையின் தாய், அக்குழந்தையை கொல்ல முயற்சிக்கவில்லை. அக்குழந்தைக்கு நீர் யோகாசன பயிற்சி அளிக்கிறார். இந்த காணொளியின் நம்பகத்தன்மை அறிந்த பிறகே இந்த காணொளிக்கு நாங்கள் அனுமதி அளித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த காணொளி பார்ப்பவர்களுக்கு மனதளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால், இதனை நீக்கியே ஆக வேண்டும் என தேசிய குழந்தைகள் வதை தடுப்பு அமைப்பு பேஸ்புக்கிற்கு எதிராக போர் கொடி உயர்த்தியது. இந்நிலையில் வேறு வழி இல்லாததால் பேஸ்புக் அக்காணொளியை நீக்குவதாக தெரிவித்துள்ளது.

அந்த காணொளியை கீழே காண்க:

https://www.youtube.com/watch?v=UOCB8j6QgeI&bpctr=1433640634