Home கலை உலகம் ஆங்கிலப் படத்திற்கு முதல் முறையாக இசை அமைத்த இளையராஜா!

ஆங்கிலப் படத்திற்கு முதல் முறையாக இசை அமைத்த இளையராஜா!

613
0
SHARE
Ad

loveமெல்போர்ன், ஜூன் 7 – இசை அமைப்பாளர் இளையராஜா முதல் முறையாக ஆங்கிலப் படம் ஒன்றுக்கு இசை அமைத்துள்ளார்.  ‘லவ் அண்ட் லவ் ஒன்லி’ என்ற அந்த படத்தின் முதல் முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது.

ஜூலியன் கரிகாலன் என்ற ஆஸ்திரேலிய வாழ் இந்தியர் தயாரித்து இயக்கி உள்ள இந்த படம் மென்மையான காதல் படமாக உருவாகி உள்ளது.

பஞ்சாப்பை சேர்ந்த இளைஞன் ஒருவன், உயர் படிப்பிற்காக ஆஸ்திரேலியா செல்கிறான். படித்துக் கொண்டே பகுதி நேர வேலையாக ஒரு விற்பனைக் கூடத்தில் பணியாற்றுகிறான். அங்கு பணியாற்றும் ஒரு ஆஸ்திரேலியப் பெண்ணை சந்திக்கிறான். அவளுடனான காதல் அனுபவம், அதனைத் தொடர்ந்து இருவருக்குள்ளும் இரு நாடுகளின் கலாச்சாரம் தொடர்பாக ஏற்படும் வேறுபாடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் இயக்கப்பட்டுள்ளது. இப்படம் நேரடியாக உலக சினிமா விழாவில் விரைவில் திரையிடப்பட உள்ளது.

#TamilSchoolmychoice

இந்த படத்திற்காக இளையராஜா மூன்று பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். ‘லவ் அண்ட் லவ் ஒன்லி’ என்ற இந்த படத்தின் தலைப்பு இளையராஜா இசையமைப்பில், விஜய் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் இடம்பெறும் ‘லவ் அண்ட் லவ் ஒன்லி’ என்ற புத்தகத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் முன்னோட்டத்தை கீழே காண்க: