Home கலை உலகம் ஐஃபா (IIFA) 2015 விருதுகள் பட்டியல்

ஐஃபா (IIFA) 2015 விருதுகள் பட்டியல்

652
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 8 – நேற்று இரவு தலைநகர் புத்ரா உள்ளரங்கில் கோலாகலமாக நடந்தேறிய ஐஃபா (IIFA) எனப்படும் இந்திப் படங்களுக்கான அனைத்துலக இந்தியத் திரைப்பட விருதுகள் விழாவில் வழங்கப்பட்ட சில முக்கிய விருதுகள்:

Indian actor Anil Kapoor arrives for the Indian International Film Academy Award (IIFA) in Kuala Lumpur, Malaysia, 07 June 2015. The 16th IIFA, often referred to as the Bollywood Oscars, celebrates the international nature of Indian cinema and takes place from 05 to 07 June.

ஐஃபாவுக்கு வருகை தரும் பிரபல நடிகர் அனில் கபூர்

#TamilSchoolmychoice

சிறந்த புதுமுக நடிகர் அறிமுகம் – டைகர் ஷரோப்

இந்திப் படவுலகை நீண்ட நாட்களாகத் தனது நடிப்பாலும் அட்டகாசமான, உயரமான தோற்றப் பொலிவாலும் அசத்தி வரும் ஜேக்கி ஷரோப் மகன் டைகர் ஷரோப்பிற்கு (Tiger Shroff) இந்த விருது வழங்கப்பட்டது.

ஹீரோ பாண்டி (Hero panti) என்ற படத்தில் சிறந்த முறையில் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த அறிமுக இயக்குநர் – உமாங் குமார்

இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் வாழ்க்கைப் பதிவுகளைத் திரைப்படமாகக் கொண்டு வந்த உமாங் குமார் ‘மேரி கோம்’ படத்திற்காகச் சிறந்த அறிமுக இயக்குநர் விருதைப் பெற்றார்.

இதே விருது சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த ‘கிக்’ திரைப்படத்திற்காகச் சஜிட் நடியாட்வாலாவிற்கும் வழங்கப்பட்டது.

சிறந்த இசையமைப்பு – சங்கர் எஹ்சான் லோய்

சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைப் பாடகர் சங்கர் மகாதேவன், எஹ்சான், லோய் என மூவர் கொண்ட குழுவினர் தட்டிச் சென்றனர். ‘டூ ஸ்டேட்ஸ்’ எனப்படும் திரைப்படத்தின் இசையமைப்புக்காக இந்த விருது அவர்களுக்கு வழங்கப்பட்டது.

வாழ்நாள் சாதனையாளர் விருது – சுபாஷ் காய்

பல அற்புதமான வெற்றித் திரைப்படங்களை வழங்கிய இயக்குநர்-தயாரிப்பாளர் சுபாஷ் காய்க்கு சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது அவரது பங்களிப்புக்காக வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகர் –  ரிதேஷ் தேஷ்முக்

‘எக் வில்லன்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகருக்கான விருதை ரிதேஷ் தேஷ்முக் பெற்றார். இவர் தமிழில் வந்த ‘பாய்ஸ்’ படப் புகழ் ஜெனிலியாவின் கணவருமாவார்.

சிறந்த துணை நடிகை – தபு 

‘ஹைடர்’ என்ற படத்தில் சிறந்த நடிப்பை வழங்கியதற்காகத் தபுவிற்குச் சிறந்த துணை நடிகை விருது வழங்கப்பட்டது.

சிறந்த பெண்மணி – தீபிகா படுகோன்

அண்மைய காலங்களில் துணிச்சலாகப் பெண்ணீயக் கருத்துகளை முன்வைத்த நடிகை தீபிகா படுகோன். தனது அங்கங்களை வர்ணித்த பத்திரிக்கையாளர் ஒருவர் ‘ஆம் நான் ஒரு பெண்தான்’ எனக்கூறி சில துணிச்சலான கருத்துக்களைக் கூறி ஒரு வாங்கு வாங்கிய தீபிகா, அண்மையில் பெண்களின் சுதந்திரம் பற்றி வெளிக் கொணர்ந்த ஒரு காணொளி பலத்த வரவேற்பையும் பெற்று சர்ச்சைகளையும் உருவாக்கியது.

அவருக்குச் சிறப்பு விருதாகச் சிறந்த பெண்மணி (Woman of the year) விருது வழங்கப்பட்டது.

சிறந்த கதையமைப்பு -குயீன் 

தோல்வியில் முடியும் திருமணம். அதனால் ஏற்பட்ட விரக்தியால் மேலை நாட்டுக்குத் தனியாகப் பயணமாகும் சாதாரண வட இந்தியப் பெண். அங்கு அவளுக்கு ஏற்படும் மனமாற்றங்கள் – இப்படி புதிய கதையமைப்புக் களத்தைக் கையாண்ட ‘குயின்’ திரைப்படம் சிறந்த கதையமைபுக்கான விருதைப் பெற்றது.

விகாஸ் பாஹல், சைதல்லி பார்மர், பார்வேஸ் ஷேக் ஆகியோர் கூட்டாக இந்தக் கதையமைப்புக்காக விருதைப் பெற்றனர்.

சிறந்த இயக்குநர் – ராஜ்குமார் ஹிராணி

கடந்த ஆண்டின் மறக்க முடியாத வெற்றிப் படம் ‘பிகே’. அமீர் கானின் நடிப்பில் வெளிவந்து சர்ச்சைகளையும், அபார வசூலையும் கொட்டிக் குவித்த படம். இப்போது சீனாவிலும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்திய மதங்களிலும், நடைமுறைகளிலும், ஒளிந்து கொண்டிருக்கும் போலித்தனங்களையும், முரண்பாடுகளையும் வித்தியாசமின்றி நாசூக்காக வெளிச்சம் போட்டுக் காட்டிய விதத்தில் சிறந்த இயக்குநருக்கான விருதைத் தட்டிச் சென்றார் ராஜ்குமார் ஹிராணி.

சிறந்த நடிகை – கங்கணா ராணாட்

வேறு யாருக்கு? குயின் கதாநாயகி கங்கணாவுக்குத்தான்!

இனிப்புப் பலகாரங்கள் விற்கும், உள்ளூர் மட்டுமே தெரிந்த இயல்பான இந்திய இளம் பெண்ணை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்டிய – அதே வேளையில் முதன் முதலாகப் புதிய மேல்நாட்டுச் சூழ்நிலையில் எதிர்கொண்ட சவால்களைச் சமாளித்த விதத்தைக் காட்டியதிலும் கங்கணா சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.

சிறந்த நடிகர் – ஷாஹிட் கபூர்

‘ஹைடர் என்ற படத்தில் வழங்கிய நடிப்பிற்காக ஷாஹிட் கபூருக்குச் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

சிறந்த படம் – குயீன் 

கடந்த ஆண்டின் சிறந்த இரண்டு இந்திப் படங்களாகக் கருதப்பட்டவை குயின் மற்றும் பிகே. இந்த இரண்டில் ஒரு படத்திற்குத்தான் சிறந்த பட விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிற்கேற்ப ‘குயின்’ சிறந்த திரைப்படமாகத் தேர்வு பெற்றது.

-செல்லியல் தொகுப்பு