Home உலகம் ஜெர்மனியில் நாளை ‘ஜி7’ உச்சி மாநாடு: 3-வது முறையாக ரஷ்யா நீக்கம்!

ஜெர்மனியில் நாளை ‘ஜி7’ உச்சி மாநாடு: 3-வது முறையாக ரஷ்யா நீக்கம்!

493
0
SHARE
Ad

G7Map

பெர்லின், ஜூன் 8 – உலகின் பணக்கார நாடுகளின் உச்சி மாநாடு, நாளை ஜெர்மனியில் தொடங்குகிறது. இதில், மூன்றாவது முறையாக ரஷ்யா நீக்கப்பட்டதால், அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகள் மட்டும் பங்கேற்கின்றன.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மார்கெல், அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ஐந்து பணக்கார நாட்டின் அதிபர்கள் பங்கேற்கின்றனர். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

முன்னதாக, ‘ஜி8’ உச்சி மாநாடு எனக் குறிப்பிடப்பட்டது, உக்ரைன் விவகாரம் காரணமாக ரஷ்யா தற்காலிமாக நீக்கப்பட்டுள்ளதால், இந்த வருடம், ‘ஜி7’ ஆக மாறியுள்ளது. இதுவரையிலும், ரஷ்யா மூன்று முறை, உச்சி மாநாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

நாளை தொடங்கும் இந்த மாநாட்டில், ஏஞ்சலா மார்கெல், அமெரிக்க அதிபர் ஒபாமாவை, பாவரியன் பாரம்பரியப்படி உபசரிக்க இருக்கிறார்.அதைத் தொடர்ந்து, காலை 11:00 மணியளவில் உச்சி மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கும்.

இதில், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே, இத்தாலிப் பிரதமர் மட்டே ரென்சி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபெ ஆகியோர்  கலந்துகொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் உலகப் பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு ஆகியவை குறித்து முக்கிய விவாதங்கள் நடக்க இருக்கின்றன. உலகின் மிக முக்கிய சக்திகளாக விளங்கும் இவர்கள் ஒன்று கூடும் இந்த ‘ஜி7’ உச்சி மாநாடு, உலகில் அடுத்து நிகழும் மாற்றங்களை முடிவு செய்வதாக இருப்பதால், அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.