Home நாடு “பக்காத்தான் முடிவுக்கு வந்தது, இது இறுதிச் சடங்குகளுக்கான நேரம்” – கிட் சியாங்

“பக்காத்தான் முடிவுக்கு வந்தது, இது இறுதிச் சடங்குகளுக்கான நேரம்” – கிட் சியாங்

692
0
SHARE
Ad

?????????????????கோலாலம்பூர், ஜூன் 8 – பக்காத்தான் தனது பாதையில்  இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. எதிர்கட்சிகளின் இறுதிச்சடங்குகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன என்று ஜசெக கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.

நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த பாஸ் கட்சியின் மாநாட்டில் ஜசெகவுடன் உறவுகளை முறித்துக் கொள்கின்றோம் எனப் பாஸ் உலாமாக்கள் மன்றம் முடிவெடுத்து அதனைப் பாஸ் பொதுப் பேரவையும் எந்தவித விவாதமும் இன்றி ஏற்றுக் கொண்டது. அது குறித்துக் கருத்துக் கூறிய லிம் கிட் சியாங் இவ்வாறு கூறியுள்ளார்.

பாஸ் உலாமாக்கள் மன்ற கூட்டத்திற்குப் பிறகு பக்காத்தான் கூட்டணி பிளவு படலாம் எனத்  தான் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கூறிய ஆரூடம், இப்போது உண்மையாகிவிட்டதாக லிம் கிட் சியாங் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கேலாங் பாத்தாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய லிம் கிட் சியாங், “பக்காத்தானை உடைப்பதற்கும், அழிப்பதற்கும் அம்னோ வகுத்த வியூகங்கள் மற்றும் திட்டங்களுக்குச் சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றி கிடைத்துள்ளது. அம்னோ பாஸ் கட்சியுடன் கிளந்தானில் ஹூடுட் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் இணக்கம் அடைந்துள்ளது” என்று கிட் சியாங் கூறியுள்ளார்.

இதன் காரணமாக, ஹூடுட் விவகாரம் பற்றி மேலும் விவாதிக்க விரும்பாத பாஸ் கட்சி பக்காத்தான் கூட்டணியில் இருந்து கொண்டே , ஜசெக கட்சியுடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இதனிடையே, பாஸ் தலைவர் ஹாடி அவாங், ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இருவரும் இக்கட்டான, சங்கடமான சூழ்நிலையில் சந்தித்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.

இருவரும் சபா மாநிலத்தின் குண்டாசாங் பகுதியில் சனிக்கிழமை சந்தித்துக் கொண்டனர். இருவரும் ஒருவருக்கொருவர் கைக்குலுக்கிக் கொண்டதோடு எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இன்றி விலகிச் சென்றனர் என்று கூறப்படுகின்றது.