Home கலை உலகம் கொலை வெறியால் வாய்ப்பு குவிகிறது: தனுஷ் ஒரு பாட்டு பாட ரூ.8 லட்சம்

கொலை வெறியால் வாய்ப்பு குவிகிறது: தனுஷ் ஒரு பாட்டு பாட ரூ.8 லட்சம்

805
0
SHARE
Ad

dhanush

சென்னை, மார்ச்.7- நடிகர் தனுஷ் நிறைய படங்களில் பின்னணி பாடல்களை பாடி வருகிறார். புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்தில் இவரை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடகராக அறிமுகம் செய்தார்.

அப்படத்தில் நாட்டு சரக்கு என்ற பாடலை பாடினார். அதன் பிறகு புதுக்பேட்டை படத்தில் பாடினார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன்மேல ஆசதான் என்ற பாடலை பாடினார்.

#TamilSchoolmychoice

மயக்கம் என்ன படத்தில் தனுஷ் பாடிய ஓட ஓட தூரம் குறையல, காதல் என் காதல் அது தண்ணீருல பாடல்கள் வெற்றிப்பெற்றன. ‘3’ படத்தில் பாடிய ஒய் திஸ் கொலைவெறி டி தனுசை உலக அளவில் பிரபலப்படுத்தியது.

இதையடுத்து அவருக்கு பாடல் வாய்ப்புகள் குவிகின்றன. ஆனாலும் குறிப்பிட்ட பாடல்களை தேர்வு செய்து பாடுகிறார். இந்திப் படங்களில் பாட அவருக்கு அழைப்பு வந்தது. அவ்வழைப்பை அவர்  ஏற்கவில்லை.

தற்போது செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா வற்புறுத்தலின் பேரில் ஒரு பாடலை பாடி உள்ளார். இந்த பாட்டுக்கு அவர் ரூ.8 லட்சம் சம்பளம் வாங்கியதாக செய்தி பரவி உள்ளது.