Home கலை உலகம் ‘எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் சரவணன் விபத்தில் படுகாயம்

‘எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் சரவணன் விபத்தில் படுகாயம்

678
0
SHARE
Ad

சென்னை, ஜூன் 9- இயக்குநர் சரவணன் தனது உறவினர்களுடன் திருச்சி அருகே சென்னை நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அவர்களது காரின் முன்புறச் சக்கரம் வெடித்தது.

Saravana-Car Accident

இதனால் நிலை தடுமாறிய கார் விபத்தில் சிக்கியது. விபத்தின் காரணமாகக் காயமடைந்த சரவணன் மற்றும் அவரது உறவினர் சிகிச்சைக்காகப் பெரம்பலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

உயிருக்கு ஆபத்தில்லை என்றும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரவணனின் இயக்கத்தில் சாலை விபத்து குறித்து எங்கேயும் எப்போதும் என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இவர் எங்கேயும் எப்போதும் படம் தவிர, இவன் வேற மாதிரி, வலியவன் முதலிய படங்களை இயக்கியவர் .