சென்னை, ஜூன் 9- தமிழகக் கடலில் மாயமான டோனியர் ரக விமானம் இதற்கு முன் கோவா கடலில் கடந்த மார்ச் 26–ந்தேதி விபத்துக்குள்ளானது.
இதில் விமானி கிரண் செகாவத் பலியானார். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மற்றொரு விமானி மீனவர்களால் காப்பாற்றப்பட்டார்.
அதேபோல், தற்போது தமிழகக் கடல் பகுதியில் விமானம் விழுந்து கிடக்கிறதா? விமானிகள் தத்தளிக்கிறார்களா? என 4 கடலோரப் பாதுகாப்புப் படைக் கப்பல்கள், 10 கடலோரக் காவல் படைக் கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
மேலும், 35 ஆயிரம் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவர்களையும் தேடும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
அதோடு மட்டுமின்றி, சென்னை முதல் கன்னியாகுமரி வரை 14 கடலோர மாவட்டக் காவல்துறையினரும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக நாகை மாவட்டக் கடல் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.