Home கலை உலகம் கடற்கரைப் புது வீட்டில் குடியேறினார் சிவகார்த்திகேயன்!

கடற்கரைப் புது வீட்டில் குடியேறினார் சிவகார்த்திகேயன்!

744
0
SHARE
Ad

Sivakarthikeyan

சென்னை, ஜுன் 10- திறமை இருந்தால் எந்தத் துறையாக இருந்தாலும் சரசரவென முன்னேறிவிடலாம் என்பதற்கு சமீபத்திய உதாரணம் சிவகார்த்திகேயன்.

குறுகிய காலத்தில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிப்பட நாயகனாகக் கொடிகட்டிப் பறந்து கொண்டிருப்பவர்.

#TamilSchoolmychoice

ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவு இருக்கும். அது அவரவரின் பொருளாதாரச் சூழ்நிலைக்கு ஏற்றபடி சிறியதாகவோ பெரியதாகவோ அமையும்; அமையாமலும் போகும்.

சிவகார்த்திகேயனுக்கு அந்த வகையிலும் கொடுப்பினையே!

சென்னையை அடுத்த பனையூரில் கடற்கரை ஓரமாகத் தன் கனவு இல்லத்தைக் கட்டிக் குடி புகுந்துள்ளார்.

இது தன் அம்மாவிற்காகவும் குடும்பத்திற்காகவும் தான் கட்டிய கனவு வீடு என்கிறார் சிவகார்த்திகேயன்.