Home கலை உலகம் நடிகர் சங்கத் தேர்தல் நீதிபதியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் – விஷால் வழக்கு!

நடிகர் சங்கத் தேர்தல் நீதிபதியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் – விஷால் வழக்கு!

553
0
SHARE
Ad

NTLRG_150528114312000000சென்னை, ஜூன் 12 – தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தல் ஜூலை 15-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதில் மீண்டும் சரத்குமார் தலைவர் பதவியில் போட்டியிட இருக்கிறார்.

இவரது அணி சார்பில் பொதுச்செயலாளராக உள்ள ராதாரவி, துணைத் தலைவர் கே.என்.காளை போன்றோரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் புதிதாக விஷால், நாசர் அணியினரும் தேர்தலில் நிற்கத் தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டும் பணி நடந்துவருகிறது.

#TamilSchoolmychoice

எனினும் தேர்தல் நடக்கவிருப்பதாக அறிவித்துள்ள ஜூலை 15-ஆம் தேதியான புதன்கிழமை என்பது வேலை நாள். எப்போதுமே, தேர்தல் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் தான் நடக்கும்.

அதே போல் இந்த முறையும் மாற்ற வேண்டும். இல்லையேல் வெளியூரில் படப்பிடிப்புகளில் இருப்போரால் தேர்தலில் கலந்துகொள்ள இயலாது.

அதே போல் தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் எனவும் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து வழக்குத் தொடுத்துள்ளார் விஷால்.

முக்கியமாக நாடக நடிகர்கள் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும். அதனால் தேர்தல் தினத்தை மாற்ற வேண்டும் என வழக்கில் கோரப்பட்டுள்ளது.   எனவே நீதிபதி விசாரணைக்குப் பிறகு தேர்தல் தேதி மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.