காத்மாண்டு, ஜூன் 12 – நேபாளத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக 6 கிராமங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 30 பேர் இறந்திருக்கலாம் என முதலில் கருதப்பட்டது.
இந்நிலையில் இந்நிலச்சரிவால் 95 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 40 பேரை காணவில்லை என்றும் தெரியவந்துள்ளது. அந்நாட்டின் டப்லேஜங் மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது.
அப்போது, 6 கிராமங்களில் நேற்றிரவு மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நிலையில், திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது வீடுகளில் உறங்கிகொண்டிருந்த மக்களில் 95 பேர் பலியானர்கள்.
இதுவரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அப்பகுதியை சேர்ந்த பலரை காணில்லை. எனவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
ராணுவம் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். ஆனால் அப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் மீட்பு பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.