Home கலை உலகம் திருப்பதி கோயிலில் நடிகர் விதார்த் திருமணம் – நடிகர்களில் ராதாரவி மட்டும் பங்கேற்பு!

திருப்பதி கோயிலில் நடிகர் விதார்த் திருமணம் – நடிகர்களில் ராதாரவி மட்டும் பங்கேற்பு!

664
0
SHARE
Ad

actor-vidharth-marriage-600திருமலை, ஜூன் 12 – திருப்பதி கோயிலில் நடிகர் விதார்த்துக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. ‘மைனா’ என்ற தமிழ்த் திரைப்படத்தில் நாயகனாக நடித்துப் பிரபலமானவர் நடிகர் விதார்த்.

இவருக்கும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த காயத்திரி தேவி என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் திருமணம் நேற்று திருப்பதியில் நடந்தது.

அங்குள்ள பரக்கால மடத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இத்திருமணவிழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ராதாரவி கலந்துகொண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.