Home உலகம் ரஷ்யாவிற்கு வாழ்த்து தெரிவித்த மோடி – எரிச்சலடைந்த அமெரிக்கா!

ரஷ்யாவிற்கு வாழ்த்து தெரிவித்த மோடி – எரிச்சலடைந்த அமெரிக்கா!

570
0
SHARE
Ad

putin4_1_0புதுடெல்லி, ஜூன் 13 – ரஷ்யாவில் நேற்று ரஷ்ய தினம் கொண்டாடப்பட்டதால், அந்நாட்டு மக்களுக்கு இந்தியப் பிரதமர் மோடி டுவிட்டர் வழியே வாழ்த்து தெரிவித்தார். அவரின் வாழ்த்து அந்நாட்டு அதிபர் புதினுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ள நிலையில், இந்திய-ரஷ்யா உறவு பலம் பெற்று வருவது அமெரிக்காவிற்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யாவிற்கு அடுத்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரிக்ஸ் மற்றும் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நேற்று அங்கு ‘ரஷ்ய தினம்’ கொண்டாடப்படுவதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில், “ரஷ்ய தினமான இன்று அந்நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவிற்கும், ரஷ்யாவிற்குமான நல்லுறவு நீண்ட காலம் தொட்டு இருந்து வருகிறது. இரு நாட்டு மக்களுக்கும் இடையே வலுவான உறவு மேலும் பெருக வேண்டும். இந்த உறவு சிறக்க நான் உறுதியாக பணியாற்றுவேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால், மோடி தனது வாழ்த்தினை ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிகளில் தெரிவித்தது தான். இந்நிலையில், ரஷ்யாவின் பரம எதிரியான அமெரிக்கா, இந்திய-ரஷ்ய நட்புறவின் காரணமாக எரிச்சலடைந்துள்ளது. ஏற்கனவே புதினின் இந்திய வருகையின் போது, ரஷ்யாவுடனான உறவில் இந்தியா கவனத்துடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.