மெல்பர்ன், ஜூன் 13 – நேற்று இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகர் துல்லாமெரின் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட எம்எச்148 (MH148) மாஸ் விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி.
இயந்திரத்தில் தீ ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டு, மெல்பர்னிலிருந்து நேற்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் விமான நிலையம் திரும்பி அவசரமாகத் தரையிறக்கப்பட்டது இந்த விமானம்.
விமானத்தின் விமானி கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு அனுப்பிய செய்தியில், இயந்திரத்தில் தீப்பிடித்ததாகவும், விமானத்தின் எரிபொருள் தீர்ந்தவுடன் அவசரமாகத் தரையிறங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
279 பயணிகளையும், 13 பணியாளர்களையும் இந்த எம்.எச்.148 விமானம் கொண்டிருந்தது.
தொடர்ந்து விமான விபத்துகள், எதிர்மறையான விமர்சனங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மாஸ் விமான நிறுவனம் தற்போது 2 பில்லியன் அமெரிக்க டாலரைக் கொண்டு மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
படம் : EPA