கோத்தா கினபாலு, ஜூன் 13 – சபா மாநிலம் ரனாவில் இன்று அதிகாலை 2.29 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் கட்டிடங்கள் குலுங்கி அங்கிருந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.
இது குறித்து கோத்தா கினபாலுவாசி ஒருவர் கூறுகையில், “அதிகாலை 2.29 மணியளவில் நான் என் வீட்டில் நிலநடுக்கத்தை உணர்ந்தேன். வீட்டின் கூரையின் கூரையின் மேல் பெரிய பூனை ஒன்று ஓடுவது போல் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 5-ம் தேதி 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு கோத்தா கினபாலு மலையில் 18 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.