Home அவசியம் படிக்க வேண்டியவை அனைத்துலக சைக்கிள் போட்டியில் பதக்கம் வென்றார் நடிகர் ஆர்யா!

அனைத்துலக சைக்கிள் போட்டியில் பதக்கம் வென்றார் நடிகர் ஆர்யா!

581
0
SHARE
Ad

proxyஸ்டாக்ஹோம், ஜூன் 14 – சுவீடன் நாட்டில் நடைபெற்ற அனைத்துலக சைக்கிள் போட்டியில் இந்தியா சார்பாகக் கலந்து கொண்ட நடிகர் ஆர்யா பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.

ஸ்வீடன் நாட்டின் தென் பகுதியில் ‘வாடேர்ன்ருண்டேன்’ (Vatternrundan) போட்டி என்பது மிகுந்த பிரபலமான ஒன்று. கரடு முரடான பாதைகள், சீரற்ற வளைவுகள், மலைகள், அபாயகரமான குன்றுகள் போன்றவற்றைத் தாண்டி 300 கி.மீ தூரத்தைச் சைக்கிளில் கடக்க வேண்டும் என்பதே இந்த போட்டியின் நிபந்தனை.

ஆண்டு தோறும் நடைபெறும் இந்தப் பந்தயத்தில் இந்த வருடம் இந்தியா சார்பாகக் கலந்து கொண்ட ஆர்யா, சுமார் 15 மணி நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்து வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

இதன் மூலம் படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் தான் நாயகன் தான் என ஆர்யா நிரூபித்துள்ளார். போட்டியில் பதக்கம் வென்ற பிறகு ஆர்யா டுவிட்டர் வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “எனக்காக ஒவ்வொரு நிமிடமும் உங்கள் ஆழ்மனதில் இருந்து வேண்டிக் கொண்ட அத்தனை பிரார்த்தனைகளுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.