Home நாடு 2,000 ஏக்கர் நிலத்தை தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் பராமரிக்கும்- பேரா மந்திரிபுசார்

2,000 ஏக்கர் நிலத்தை தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் பராமரிக்கும்- பேரா மந்திரிபுசார்

854
0
SHARE
Ad

dato-somaஈப்போ, மார்ச்.7- பேரா மாநில தமிழ்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக சுங்கை பெசாவில் ஒதுக்கப்பட்ட இரண்டாயிரம் ஏக்கர்நிலத்தை மேம்படுத்தி நிர்வாகம் செய்ய தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் சம்மதம் தெரிவித்ததாக பேரா மாநில மந்திரிபுசார் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காதிர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக இழுபறியாக இருந்து வந்த இந்நில பிரச்சனை இப்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகத் திறனையும் இந்தியர்களிடையே சங்கத்திற்குள்ள செல்வாக்கையும் கவனத்தில் கொண்டு இந்நிறுவனத்தை தேர்வு செய்ததாக மந்திரிபுசார் கூறினார்.

#TamilSchoolmychoice

பேரா மாநில இந்திய மாணவர் கல்வி மேம்பாட்டு அறவாரியம்  என்ற பெயரில் இந்த இரண்டாயிரம் ஏக்கர் நிலம் பராமரிக்கப்படும். இந்த அறவாரியத்தில் கல்விமான்கள், பள்ளி வாரியக் குழுவினர் என்ற வகையில் இன்னும் சிலர் இடம் பெறுவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலத்தை மேம்படுத்துவதற்கு உரிமம் பெற்றுள்ள தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் இரண்டிலிருந்து மூன்று வருட காலத்தில் வருவாய் ஈட்டத்தொடங்கிவிடும். ஐந்து ஆண்டு காலத்தில் முழுமையான வருவாய் ஈட்டும்  பட்சத்தில் நிர்வாகச் செலவு போக ஆதாயத்தை அறவாரியத்திடம் ஒப்படைக்கும்.

இதற்கான ஒப்பந்தம் கூடிய விரைவில் நடைபெறும். அறவாரியத்தில் இடம் பெற்றிருப்பவர்களின் பட்டியல் பிரதமரின் அங்கீகாரத்திற்கு  பிறகு வெளியிடப்படும்.

இந்திய மாணவர்களின்  கல்வி மேம்பாட்டிற்கு உதவும் திட்டமான இது பேரா மாநில தேசிய முன்னணி அரசாங்கம் வழங்கியுள்ள நாட்டின் மகத்தான திட்டமாகும்.

இது தவிர இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் மேலும் ஆண்டுதோறும்  பத்து லட்சம் ரிங்கிட்  வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, உயர்கல்வி மாணவர்களுக்கு யயாசான் பேராக் அறவாரியத்தின் மூலம் கல்வி உதவித் தொகைகள், தமிழ்ப்பள்ளிக்கான தொலைநகல் இயந்திரம், மின்சாரக் குடிநீர்க் கட்டண செலவுக்கும் மாநில அரசு நிதி வழங்கி வருகிறது என்பதனை டாக்டர் ஸம்ரி  தெளிவுபடுத்தினார்.