Home நாடு “நான் இன்னும் மஇகா தேசியத் தலைவர் தான்” – பழனிவேல் கூறுகிறார்

“நான் இன்னும் மஇகா தேசியத் தலைவர் தான்” – பழனிவேல் கூறுகிறார்

916
0
SHARE
Ad

Palanivel Subra Comboகோலாலம்பூர், ஜூன் 17 – மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் விடுத்திருந்த அறிக்கையைப் படித்த போது எனக்கு வேடிக்கையாக இருந்தது. அவர் தன்னை இடைக்கால தேசியத் தலைவராக அறிவித்துக் கொண்டுள்ளார்.

மேலும், இது குறித்துப் பழனிவேல் தனது பத்திரிக்கை அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-

“நான் மஇகா சட்டவிதி 91-ஐ மீறியுள்ளதாகவும், அதனால் எனது உறுப்பினர் பதவியை இழந்துவிட்டதாகவும் சுப்ரமணியம் கூறுவதில் உண்மை இல்லை.”

#TamilSchoolmychoice

“மூன்றாம் தரப்பிற்கு எதிராக வழக்குத் தொடுப்பவர்களின், மஇகா உறுப்பினர் தகுதிக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் என்ற எந்த ஒரு சட்டவிதியும் மஇகா-வில் இல்லை”

“மத்திய செயற்குழுவிற்கு எதிராகவோ அல்லது கட்சிக்கு எதிராகவோ வழக்குத் தொடுத்தால் மட்டுமே மஇகா உறுப்பினர் தகுதியை இழக்க நேரிடும்”

“எனவே நான் மீண்டும் ஒருமுறை சொல்லிக்கொள்கிறேன். நான் இன்னும் தேர்ந்தெடுக்கப்பட்ட மஇகா தேசியத் தலைவர் தான். சுப்ரா அல்லது மற்றவர்கள் கூறிக் கொள்வது தவறான ஒன்று”

“இடைநீக்கம் செய்யப்பட்ட சுப்ரா மற்றும் மற்றவர்கள் தங்களது கதைகளைக் கூறி கட்சி உறுப்பினர்களை நம்ப வைக்கப் பார்க்கிறார்கள். அது நடக்காது என நம்புகின்றேன்”

இவ்வாறு பழனிவேல் தெரிவித்துள்ளதாக முக்கியச் செய்தி இணையதளங்கள் தெரிவித்துள்ளன.