Home கலை உலகம் மலையாள நடிகர் சங்கத் தலைவராக இன்னசென்ட்டும் – செயலாளராக மம்முட்டியும் தேர்வு!

மலையாள நடிகர் சங்கத் தலைவராக இன்னசென்ட்டும் – செயலாளராக மம்முட்டியும் தேர்வு!

629
0
SHARE
Ad

Actor - Innocent(C)திருவனந்தபுரம், ஜூன் 17 – மலையாள நடிகர் சங்கத் தலைவராகத் தொடர்ந்து 6-வது முறையாக நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இன்னசென்ட் தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக நடிகர் மம்மூட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மலையாள நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்காக ‘அம்மா’ என்ற பெயரில் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்திற்கு 3 வருடங்களுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த முறை நடந்த தேர்தலில் தலைவராக இன்னசென்டும், பொதுச் செயலாளராக மோகன்லாலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போதைய உறுப்பினர்களின் பதவிக் காலம் இம்மாதத்துடன் முடிவடைவதைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று முன்தினம் கொச்சியில் நடந்தது.

#TamilSchoolmychoice

இதில் தலைவராக நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இன்னசென்ட் தொடர்ந்து 6-வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மம்மூட்டி பொதுச் செயலாளராகவும், மோகன்லால் மற்றும் பத்தனாபுரம் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் ஆகியோர் துணைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும், நடிகர் திலீப் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.  இவர்கள் அனைவரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வரும் 28-ஆம் தேதி இவர்கள் பொறுப்பேற்க உள்ளனர். இம்முறை தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும், ஒரு சட்டமன்ற உறுப்பினரும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.