கொழும்பு, ஜூன் 17 – நாட்டின் எதிர்காலத்திற்கு அவசியமாக இருப்பது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசாங்கம் என அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தம்பதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிறிசேனா இதனைத் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் ஒன்றிணைவோடு எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும்.
நாட்டின் உருமாற்றத்தையே தற்போது மேற்கொள்ள வேண்டும். அதற்காக ஐக்கிய தேசிய கட்சியா, மக்கள் விடுதலை முன்னணியா என்பது முக்கியமல்ல.
நாட்டு மக்களின் அவசியத்திற்காக நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அதிபர் மைத்திரிபால சிறிசேனா மேலும் தெரிவித்துள்ளார்.