Home நாடு நஜிப்பின் சகோதரர் புதிய கட்சி துவங்குகிறாரா?

நஜிப்பின் சகோதரர் புதிய கட்சி துவங்குகிறாரா?

648
0
SHARE
Ad

Datuk-Seri-Nazir-Razak1-565x398கோலாலம்பூர், ஜூன் 17 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் சகோதரரான நஜிர் அப்துல் ரசாக் புதிய கட்சி துவங்கப் போவதாக நேற்று ‘ஆசியா செண்டினெல்’ செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், தான் புதிய கட்சி எதையும் துவங்கும் எண்ணம் இல்லை என்றும், புதிய அரசு சாரா இயக்கம் ஒன்றை துவங்க தான் திட்டமிட்டிருந்ததாகவும் நஜிர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

தனது திட்டம் குறித்து சைபுதின் அப்துல்லா உட்பட நிறைய நண்பர்களிடம் கலந்தாலோசித்ததாகவும், ஆனால் இப்போதைக்கு அது ஒரு திட்டம் மட்டுமே என்றும் நஜிர் அப்துல் ரசாக் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

நாட்டிலுள்ள பல்லினங்களை ஒன்று சேர்க்கும் வண்ணம் புதிய கட்சி ஒன்றை நஜிப் அப்துல் ரசாக் துவங்கப் போவதாகவும், அதற்காக அவர் முன்னாள் கல்வித் துணை அமைச்சரான சைபுதின் அப்துல்லா உட்பட பலரிடம் ஆலோசனை கேட்டு வருவதாகவும் ‘ஆசியா செண்டினெல்’ செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.