Home நாடு சுப்ரா ஆதரவாளர்களின் மாபெரும் பொதுக் கூட்டம்!

சுப்ரா ஆதரவாளர்களின் மாபெரும் பொதுக் கூட்டம்!

490
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 18 – மஇகா இடைக்காலத் தேசியத் தலைவராகப் பிரகடனப் படுத்தப்பட்டிருக்கும், சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தின் நாடு தழுவிய ஆதரவாளர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 21ஆம் தேதி, நண்பகல் 12.00 மணியளவில், கோலாலம்பூர் புத்ரா வாணிப மையத்தில், மெர்டேக்கா அரங்கில் கூடவிருக்கின்றனர்.

Dr Subramaniam Ministerமஇகாவின் பெரும்பாலான கிளைத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு சுப்ராவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தக் கூட்டத்திற்கான அறிவிப்பை 2009 மத்திய செயலவையின் தலைமைச் செயலாளர் ஏ.சக்திவேல் வெளியிட்டிருப்பதோடு, எல்லாக் கிளைத் தலைவர்களுக்கும் இந்தக் கூட்டத்திற்கான அழைப்புகள் செல்பேசி குறுஞ்செய்தி வாயிலாகவும், தொலைபேசி மூலமாகவும் தற்போது அனுப்பப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

கட்சியில் தங்கள் தரப்பு ஆதரவு பலத்தை மஇகா உறுப்பினர்களுக்கும், மற்ற தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் எடுத்துக் காட்டும் அளவில் பிரம்மாண்டமான கூட்டமாக இது அமையும் என மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மஇகா இடைக்காலத் தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா இந்தக் கூட்டத்தில் முக்கிய உரையொன்றை ஆற்றுவார் என்றும் அந்த உரையில் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள், எவ்வாறு கட்சியைத் தனது தலைமைத்துவத்தின் கீழ் முன்னெடுத்துச் செல்லப் போகின்றார் என்கிற விவரங்களை அறிவிப்பார் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.