Home உலகம் 192 நாடுகளில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் 200 கோடி பேர் பங்கேற்பு – ஐ.நா

192 நாடுகளில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் 200 கோடி பேர் பங்கேற்பு – ஐ.நா

576
0
SHARE
Ad

yogatutyஐ.நா, ஜூன் 18 – உலகம் முழுவதும் 192 நாடுகளில் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ள அனைத்துலக யோகா தின நிகழ்ச்சியில் 200 கோடி பேர் வரை பங்கேற்க உள்ளதாக ஐ.நா. சபை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் நடைபெறும் யோகா தினத் துவக்க நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டு துவக்கி வைக்கிறார்.

அனைத்துலக யோகா தினம் வரும் 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, உலகம் முழுவதும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

இது குறித்து ஐ.நா சபையின் இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: “பாகிஸ்தான், சவுதி அரேபியா, மலேசியா உள்பட 192 நாடுகளில் உள்ள 256 நகரங்களில் முதலாவது அனைத்துலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது”.

“நியூயார்க் நகரில், டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற உள்ள அனைத்துலக யோகா தினத் தொடக்க விழாவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைக்கிறார். இதற்காக அவர் 20-ஆம் தேதி சனிக்கிழமை நியுயார்க் வருகிறார்”.

“இந்த நிகழ்ச்சியில், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், ஐ.நா சபை தலைவர் சாம் குட்டேசா, ஆன்மீகத் தலைவர் ரவிசங்கர் உள்பட பல பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார்”.

“இந்த நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உள்பட 30 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.