Home வணிகம்/தொழில் நுட்பம் போலிச்சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்த ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

போலிச்சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்த ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

579
0
SHARE
Ad

air-india456-600புதுடெல்லி, ஜூன் 18 – ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் விமானி ஒருவர் போலியான கல்விச் சான்றிதழைக் கொடுத்து வேலையில் சேர்ந்திருப்பது தெரிய வந்ததையடுத்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து ஏர் இந்தியாவின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “உயர்நிலைப் பள்ளிக் கல்விக்குப் பிறகு பீகாரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாகக் கருதப்பட்ட விமானியின் கல்விச்சான்றிதழைச் சரிபார்த்த போது அது போலியானதென்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விமானி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.” என்றார்.

இந்தச் சம்பவம் குறித்து ஏர் இந்தியா மற்றும் இந்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகமும் விசாரணை நடத்தி வருகின்றது.